13 கார்ட் கேம் – ஒர் அறிமுகம்

13 Card Rummy Game

13 Card Rummy Game - Most Popular Rummy Game In India

இந்திய ரம்மி கேமை போலவே இருந்தாலும் அதன் ஒரு வகை என்று சொல்லலாம். இந்தியா முழுவதும் அதிகம் விளையாடப்படும் இந்த 13 கார்ட் இந்திய ரம்மி கேம் கற்றுக் கொள்ள எளிதானது மற்றும் விளையாட களிப்பானது. 13 கார்ட்ஸ் ரம்மி திறன் சார்ந்த ஒரு கேம். இது பிளேயர்களின் மனத் திறன்களை வளர்க்கிறது. கேமின் முடிவு திறனையும் திட்டமிடுதலையும் பொருத்து அமையும். விளையாடும் போதும் மிகவும் கவனத்தை முழுமையாக செலுத்த வேண்டும். அதனாலேயே இந்த கேமின் சுவாரசியம் மேலும் அதிகரிக்கும்.

13 கார்ட்ஸ் கேம் பொருள் விளக்கம்

  • கார்ட்ஸ்: இந்த கேமில் 52 கார்டுகள் அடங்கிய ஒரு பேக் பயன்படுத்தப்படுகிறது.
  • பிளேயர்கள்: பொதுவாக, இந்த கேம் 2 பேருக்கு நடுவில் விளையாடப்படுவதாகும்.
  • ஜோக்கர்: இந்திய ரம்மி கேமில் 2 ஜோக்கர்கள் பயன்படுத்தப்படுவதை போல அல்லாமல் இந்த கேமில் ஒரே ஒரு ஜோக்கர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது

    13 கார்ட் கேம் தொடங்குவதற்கு முன்னர், ஏதாவது ஒரு கார்ட் தேர்ந்தெடுக்கப்பட்டு அது ஜோக்கராக அந்த குறிபிட்ட கேமில் அழைக்கப்படும். உதாரணமாக, 4 ஹார்ட்ஸ் ஒரு வேளை தேர்ந்தெடுக்கப்பட்டால் மற்ற சூட்களில் உள்ள அனைத்து 4 என்ற எண்ணுடைய கார்டுகளும் ஜோக்கராக ஆகிவிடும்.

  • டீலர்: 13 கார்ட்ஸ் கேமில் டீலர் யார் என்பது லாட்டரி சிஸ்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். இரண்டு பிளேயர்களும் ஆளுக்கொரு கார்டை நன்றாக ஷஃபில் செய்யப்பட்ட கார்ட்ஸ் பேக்கிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். குறைந்த கார்டினை தேர்ந்தெடுத்த பிளேயர் டீலராகி விடுவார். ஷஃபில் செய்யப்பட்ட பேக்கின் கார்டுகள் பாதியாக பிரிக்கப்படும் பின்னர் டீலர் தனக்கும் எதிராளிக்கும் கார்டுகளை விநியோகி[ப்பார்.

13 கார்ட்ஸ் கேமை விளையாடுதல்

பிளேயர்கள் வரிசைகள் மற்றும்/அல்லது செட்களையும் கொண்ட13 கார்டுகளில் ரம்மியை உருவாக்கவேண்டும் – இதுவே இந்த கேமின் குறிக்கோளாகும்.

செல்லுபடியாகும் வரிசைக்காக ஒரு உதாரணம் செல்லுபடியாகாத வரிசைக்கான ஒரு உதாரணம்
345 345
45678 45678
செல்லுபடியாகும் செட்டுக்கான ஒரு உதாரணம் செல்லுபடியாகாத செட்டுக்கான ஒரு உதாரணம்
333

AAA

9999 KKQ

ஒரு பிளேயர் இந்த குறிக்கோளை மற்றவருக்கு முன்னால் அடைந்துவிட்டார் என்றால் அவர் ‘டிக்ளேர்’ செய்துவிட்டார் என்று பொருள். செல்லுபடியாகும் டிக்ளரேஷன் அந்த பிளேயரை அந்த குறிப்பிட்ட கேமின் வின்னராக்கும்.

டிரா அடுக்குகள் அல்லது டிஸ்கார்ட் அடுக்குகள் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றிலிருந்து பிளேயர்கள் ஒரு கார்டை தங்களது முறையின் போது எடுப்பார்கள். பிளேயர்கள் எடுக்கும் முதல் கார்ட் அவரது 14வது கார்ட் ஆகும் (அவர்களது கைகளில் உள்ள கார்டுகளையும் சேர்த்து). இப்போது பிளேயர் அந்த கார்டையோ அல்லது அதனை விட மதிப்பு குறைவான அல்லது மதிப்பில்லாத – வரிசைக்கோ அல்லது செட் சேர்ப்பதற்கோ பயன்படாத கார்டை வீசுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். எனினும், எதிராளிக்கு பயன்படக்கூடிய ஒரு கார்டை வீச யாருமே விரும்பமாட்டார்கள். எனவே புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். ஏதேனும் ஒரு பிளேயர் செல்லுபடியாகும் டிக்ளரேஷனை செய்யும் வரையில் இப்படித் தான் 13 கார்ட்ஸ் கேமை தொடர வேண்டும்.


 Back to Top